வணக்கம்,
நான் உங்கள் ஜி. சிவா, கடந்த 23 வருடங்களாக கணிணி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறேன். அங்கு பல்வேறு மென்பொருள்களை பயிற்றுவித்து மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறேன். தற்பொழது இணையதளத்தில் ஆன்லைன் பயிற்சிகளை வழங்கி வருகிறேன். இதில் ஏற்கனவே தமிழ் டைப்பிங், இங்கிலீஷ் டைப்பிங், வேர்ட், எக்ஸ்சல், பவர்பாயிண்ட் மற்றும் டேலி ஈஆர்பி சி புரோகிராமிங் , சி ++, பேஜ்மேக்கர் போன்ற ஆன்லைன் பயிற்சிகள் இணைதளத்தில் வெளியிடப்பட்டு உங்கள் நல்ஆதரவை பெற்று வருகிறேன்.
தற்பொழது மேலும் ஓர் மைல்கல்லாக எனது ஆன்லைன் பயிற்சியில் மென்பொருள் வல்லுநராக ஜாவா பயிற்சியை வெளியிட்டுள்ளேன். இந்த பயிற்சியின் மூலம் மென்பொருள் நிறுவனங்களில் எளிதாக வேலைவாய்ப்பை பெற இயலும்.
நீங்கள் +2 வில் கம்ப்யூட்டர் குருப் மாணவராக இருந்தால் அல்லது கல்லூரியில் கம்ப்யூட்டர் படிப்பை மேற்கொள்ளும் மாணவராக இருந்தாலும் சரி, அல்லது இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்ளும் எந்த மாணவராக இருந்தாலும் சரி, அல்லது மென்பொருள் துறைக்கு செல்ல விரும்பினால் இந்த பயிற்சி உங்களுக்கு உதவும்.
ஜாவா பயின்றவர்களுக்கே மென்பொருள் நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்க கூடிய ஒன்றாக இருப்பதாலும் ஆன்ட்ராய்டு மென்பொருள் உருவாக்க ஜாவா பயிற்சி என்பது முக்கியமான ஒன்று என்பதை நினைவில் கொண்டால், நிச்சியம் நீங்கள் இந்த பயிற்சி தேவைபடும் என்பதை உணரூவீர்கள்.
மேலும் இந்த ஜாவா பயிற்சியை மேற்கொள்ளும்போதே தங்களுக்கு மென்பொருள்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும் வகையில் சொல்லி தரப்பட்டுள்ளது
அனைத்து பாடங்களும் நாங்கள் உங்களுக்கு நேரிடயாக சொல்லி தருவது போல் உணரவும் அளவிற்கு பயிற்சி விடியோக்கள் தயாரித்து வழங்கி உள்ளோம்.
கணிணி கல்வி துறையில் எனது 23 வருட அனுபவத்தின் காரணமாக உங்களுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டமாக வகுத்து எளிமை படுத்தி தந்துள்ளேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு முறை இந்த பயிற்சியில் சேர வேண்டியது மட்டுமே. வாழ்நாள் முழுவதும் இந்த பாடங்கள் உங்களுக்கு சொந்தமானவை. எப்பொழதும் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள இயலும் என்பதையும் நினைவுட்ட விரும்புகிறோம்.
இப்பயிற்சியில் சேர்ந்து வாழ்வில் வளம்பெற எனது வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
க.சிவா
யுடிமி ஆசிரியர்,